தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 6 மாதத்திற்கு முன் மாயமானவர் வனத்தில் எலும்புக்கூடாக மீட்பு

 6 மாதத்திற்கு முன் மாயமானவர் வனத்தில் எலும்புக்கூடாக மீட்பு

 6 மாதத்திற்கு முன் மாயமானவர் வனத்தில் எலும்புக்கூடாக மீட்பு


ADDED : ஆக 25, 2026 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 12:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அஞ்செட்டி: அஞ்செட்டி அருகே, ஆறு மாதங்களுக்கு முன், ஆடு மேய்க்க சென்ற சின்னசாமி, 45, வனப்பகுதியில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பனையூரை சேர்ந்த சின்னசாமி, ஆறு மாதங்களுக்கு முன், அப்பகுதி பனை ஏரிக்கு பின்புறம், வனப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்று மாயமானார்.

பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் மதியம், 12:30 மணிக்கு, பனை ஏரிக்கு பின்புறம் உள்ள வனத்தில், மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

அருகே, ஆணின் உடை, உடைந்த மொபைல்போன் கிடந்தது. அதிலிருந்த சிம்கார்டை எடுத்து, மற்றொரு மொபைல்போனில் போட்டு, அதிலிருந்த எண்களை தொடர்பு கொண்டு போலீசார் பேசினர்.

இதில், எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டவர், மாயமான சின்னசாமி என, தெரியவந்தது. வனவிலங்குகள், அவரை தாக்கி கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில், அஞ்செட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us