தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/'மா' விவசாயிகள் ஆலோசனை

'மா' விவசாயிகள் ஆலோசனை

'மா' விவசாயிகள் ஆலோசனை


ADDED : ஜன 26, 2026 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 06:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: மாவட்ட 'மா' விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், போச்சம்பள்ளியில், 'மா' விவசாயிகள் ஆலோ-சனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் சவுந்திரராஜன் தலைமை வகித்தார். செயலாளர் சக்திவேல், பொருளாளர் மணி-வண்ணன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், 2026 பிப்., மாதம், 'மா'விற்கான விலையை, கலெக்டர் தலைமையில் முத்தரப்பு கூட்டம் நடத்தி நிர்ணயிக்க வேண்டும். 2024ல் வெப்பத்தால் 'மா' மகசூல் பாதிக்கப்பட்டது. இதை இயற்கை பேரிடர் என சொல்லப்பட்டது. எனவே இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிக-ளுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

2025ல், 'மா' நல்ல விளைச்சல் இருந்தாலும், முத்-தரப்பு கூட்டத்தில் கலெக்டர் தலைமையில் மாங்கூழ் அதிபர்கள் கிலோ ஒன்றுக்கு, 12 ரூபாய் வழங்குவதாக அறிவித்தனர். ஆனால், 4 முதல், 5 ரூபாய் என 'மா' அறுவடை கூலிக்கு கட்டுப்படி-யாகாத விலை கொடுத்தனர். இதனால் விவசா-யிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே இந்தாண்டு 'மா'விற்கு உரிய விலை நிர்ணயம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், 'மா' விவசாயிகளுக்கு மத்-திய அரசின் சந்தை இழப்பீடு திட்டத்தில், 2.47 லட்சம் டன் மாங்காய்க்கு, 92 கோடி ரூபாய்

நிவா-ரணம் வழங்குவதாக தமிழக அரசின் சார்பாக, அமைச்சர் அறிவித்து, ஆனால் வழங்கவில்லை. ஆகவே அறிவித்தபடி, 92 கோடி ரூபாயை, 'மா' விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இந்த ஆண்டு தற்போது தட்பவெப்பநிலையால் சிறப்-பாக 'மா' பூக்கள் பூத்துள்ளன. நல்ல மகசூல் கிடைக்கும். எனவே, 'மா' கிலோ ஒன்றுக்கு, 25 ரூபாய் விலை நிர்ணயம் செய்து, தமிழக அரசு 'மா' விவசாயிகளை பாதுகாக்க வேண்டும், என்-பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us