தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாங்காய் விலை நிர்ணயமின்றி முடிந்தது 'மா' முத்தரப்பு கூட்டம்

 மாங்காய் விலை நிர்ணயமின்றி முடிந்தது 'மா' முத்தரப்பு கூட்டம்

 மாங்காய் விலை நிர்ணயமின்றி முடிந்தது 'மா' முத்தரப்பு கூட்டம்


ADDED : மே 19, 2026 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2026 11:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த, 'மா' முத்தரப்பு கூட்டத்தில், மாங்காய் விலை நிர்ணயத்தில், எந்த முடிவும் எட்டப்படாமல் கூட்டம் முடிந்தது.

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, 'மா' விவசாயிகள், மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்களுடன், அதிகாரிகள் முத்தரப்பு கூட்டம் நடத்தினர். கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார்.

விவசாயிகள் கூறியதாவது:

வேலையாட்கள் கூலி, பூச்சிக்கொல்லி மருந்து விலை உயர்வு மற்றும் பருவநிலை மாற்றத்தால், 'மா' விவசாயம் தொடர்ந்து சரிவில் உள்ளது. நடப்பாண்டில் மகசூல் குறைவாகவே உள்ளது.

குறைந்தபட்சம் கிலோ, 16 ரூபாய் வரை உற்பத்தி செலவு ஏற்படுகிறது. மாங்கூழ் தொழிற்சாலைகள், கிலோ, 18 ரூபாய்க்கு மாங்காய்களை கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

'மா' தொழிற்சாலை உரிமையாளர்கள் கூறிய தாவது:

மாம்பழ கொள்முதல் விலையை தனிப்பட்ட முறையில் நிர்ணயம் செய்ய முடியாது. தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் விளைச்சல் மற்றும் ஆர்டர்களுக்கு ஏற்றவாறே விலை நிர்ணயம் செய்ய முடியும்.

கடந்தாண்டு தயாரித்த மாங்கூழ் விற்பனையாகாமல் தேங்கி உள்ளது. போர் நடவடிக்கைகளால் மாங்கூழ் ஏற்றுமதி முற்றிலும் பாதித்து, கப்பல் வாடகையும் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.

நாங்களும் சொல்ல முடியாத துயரில் உள்ளோம். இதுவரை மற்ற மாநிலங்களில் அதிகபட்சமாக, 'மா' கிலோ, 7 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுவதாக தெரிகிறது. நாங்கள் இதுவரை கொள்முதலை தொடங்ககவில்லை. ஜூன், முதல் வாரத்தில் விவசாயிகள், அறுவடையை தொடங்குங்கள்.

இவ்வாறு கூறினர்.

இரு தரப்பு கோரிக்கைகளையும் கேட்ட கலெக்டர் தினேஷ்குமார், “மாங்கூழ் தொழிற்சாலைகள், கிருஷ்ணகிரி மாவட்ட மாங்காய்களுக்கு முன்னுரிமை கொடுத்து, கொள்முதல் செய்ய வேண்டும்.

“இங்கு மாங்காய் தட்டுப்பாடு இருந்தால், அண்டை மாநிலங்களில் கொள்முதல் செய்யுங்கள். விவசாயிகளை காப்பாற்றும் வகையில் மாங்கூழ் தொழிற்சாலைகள் கிலோவுக்கு, 15 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும்,” என்றார்.

இதையடுத்து, மாங்காய் விலை நிர்ணயம் செய்யப்படாத நிலையிலேயே, முத்தரப்பு கூட்டம் முடிவடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us