/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாசாணியம்மன் கோவில் மஹா யாகம் திருவிழா
/
மாசாணியம்மன் கோவில் மஹா யாகம் திருவிழா
ADDED : பிப் 23, 2024 04:24 AM
ஓசூர்: ஓசூர், பாகலுார் சாலை சமத்துவபுரத்தில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோவில், 7ம் ஆண்டு மயான பூஜை குண்டம் திருவிழா கடந்த, 9ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, 2ம் ஆண்டு மங்கள சண்டி மஹா யாகம் திருவிழா நேற்று துவங்கி நாளை வரை, 3 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமம், மஹா தீபாராதனை மற்றும் அம்மன் வழிபாடு ஆகியவை நடந்தன. காலை, 10:00 மணிக்கு தேர்பேட்டை தெப்பக்குளத்திலிருந்து அம்மனுக்கு பால்குடம், மஞ்சள் குடம் மற்றும் அலகு குத்திக்கொண்டு, காவடி அலகு, பறவை அலகு குத்திக்கொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மதியம், 2:00 மணிக்கு, அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தன. இன்று (பிப்.23) காலை, 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடக்க உள்ளது. மாலை, 6:00 மணிக்கு, பூ கரகம் ஊர்வலம் நடக்கிறது.