'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் முகமூடி கொள்ளை
'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் முகமூடி கொள்ளை
ADDED : மார் 07, 2026 02:23 AM
உத்தனப்பள்ளி: உத்தனப்பள்ளி அருகே டாடா எலக்ட்ரானி க்ஸ் நிறுவனத்தில் புகுந்த கொள்ளை கும்பல், காவலாளி துப்பாக்கியை பறித்து, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'ஏசி' உபகர ணத்துடன் தப்பியது.
இருப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியை அடுத்த லாலிக்கல் அருகே, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிற்சாலை உள்ளது. இங்கு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
இங்கு புதிதாக 'ஏசி' பொருத்துவது, சர்வீஸ் செய்வது மற்றும் அனைத்து பணிகளுக்கும், நிறுவனத்திற்குள் தனியாக கட்டடம் ஒதுக்கி, தேவையான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் இருவர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை நேரத்தில், நிறுவனத்திற்குள் முகமூடி அணிந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் புகுந்தனர்.
துப்பாக்கியுடன் நின்றிருந்த பீஹார் மாநில தொழிலாளி குல்பீர் அகமது, 48, கெலமங்கலம், உள்ளுக்குறுக்கை கிராமத்தை சேர்ந்த சரவணன், 40, ஆகிய இருவரையும் தாக்கி, கயிற்றால் கட்டி போட்டு, வாயில் துணி வைத்து அடைத்தனர்.
பின்னர், அங்கிருந்த, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் மற்றும் விலை உயர்ந்த பொருள், காவலாளி ஒருவரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து தப்பினர்.
மர்ம நபர்கள் நேற்று அதிகாலை அவ்வழியாக வந்த மக்கள், காவலாளிகள் கட்டி போடப்பட்டிருப்பதை பார்த்து, கட்டுகளை அவிழ்த்து விட்டனர்.
தக வலறிந்த உத்தனப்பள்ளி போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளின் அடிப்படையில், மர்ம நபர்களை தேடி வருகின் றனர்.
