/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு மருத்துவமனையில் தாய், சேய் நல கட்டட பணி
/
அரசு மருத்துவமனையில் தாய், சேய் நல கட்டட பணி
ADDED : செப் 05, 2024 03:42 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்-பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், டாடா நிறுவன சமூக சுற்றுச்சூழல் பங்களிப்பு நிதியில் இருந்து, 68 லட்சம் ரூபாய் மதிப்பில், தாய், சேய் நல கட்டட பணிக்கான பூமி பூஜை மற்றும் 28 லட்சம் ரூபாய் மதிப்பில், 25 இருக்கைகள் கொண்ட தாய், சேய் நல வாகன பயன்பாடு ஆகியவற்றை, மாவட்ட கலெக்டர் சரயு, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தாய், சேய் நல வாகன சாவியை, டாடா குழும சமுதாய பங்களிப்பு நிதி தலைவர் ஆர்.வி.சி., பதி, மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார். மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், 10 கர்ப்பிணிக-ளுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகத்தை கலெக்டர் வழங்கினார். மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஷ் குமார், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், கெமலங்கலம் டவுன் பஞ்., தலைவர் தேவராஜன், தேன்கனிக்கோட்டை தாசில்தார் கோகுல்நாத் உட்பட பலர் பங்கேற்றனர்.