ADDED : ஏப் 26, 2026 05:12 AM
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, சந்துார் பிரிவு சாலை பகுதியிலிருந்து, திருப்பத்துார் செல்லும் சாலையில், 200 மீட்டர் தொலைவில், மழைக்காலங்களில் உபரிநீர் செல்லும் ஆறு உள்ளது.
இந்த ஆற்றின் அருகே, திருப்பத்துார் செல்லும் சாலையை ஒட்டிய பகுதிகளில், சந்துார் பிரிவு சாலை பகுதியிலுள்ள இறைச்சி கடைக்காரர்கள் இறைச்சி கழிவுகளையும், அதேபோல் அப்பகுதியில் உள்ள ஓட்டல், கூல்டிரிங்ஸ் மற்றும் சிறு, சிறு வணிக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவு, குப்பையை மூட்டைகளில் கட்டி, மூட்டை, மூட்டையாக சாலையோரம் வீசி செல்கின்றனர்.
இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால், சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சம்மந்தப்பட்ட பஞ்., நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
