ADDED : டிச 22, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்களை தேடி மருத்துவ முகாம்
பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 22---
கடத்துார் பேரூராட்சியில், தர்மபுரி மெயின் ரோடு, காந்தி நகர் பகுதியில் நேற்று, 'மக்களை தேடி மருத்துவ முகாம்' வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அரசு தலைமையில், டாக்டர் கனல்வேந்தன் முன்னிலையில் நடந்தது. இதில் பொதுமக்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனை செய்து, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. காசநோய், தொழுநோய், புற்றுநோய் போன்ற நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் பார்த்திபன், விக்னேஷ் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர்.