/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிராமணர் நலச்சங்கத்தின் உறுப்பினர் பொதுக்குழு
/
பிராமணர் நலச்சங்கத்தின் உறுப்பினர் பொதுக்குழு
ADDED : டிச 24, 2024 01:45 AM
கிருஷ்ணகிரி, டிச. 24-
கிருஷ்ணகிரியில், பிராமணர் நலச்சங்கத்தின் உறுப்பினர் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், குத்துவிளக்கேற்றி, சங்க உறுதி மொழியை ஏற்ற உறுப்பினர்கள், மூத்த உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, ராம ஆஞ்சநேய சேவா சமிதி டிரஸ்ட் அமைப்புக்கு, சமூக சேவை விருது வழங்கப்பட்டது. 2023, 2024ல் நடந்த
நவராத்திரி கொலு
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், 2023ம் ஆண்டில், பாரதியார், ராஜாஜி பிறந்த நாள் பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசும் வழங்கப்பட்டது. 2023, 2024ம் ஆண்டு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, உறுப்பினர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். பின்னர் தலைவருக்கு பாராட்டும், புதிய நிர்வாகிகள் தேர்வும் நடந்தது.