ADDED : ஜூலை 28, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராஜீவ் நகரை சேர்ந்தவர் முகமது யூசுப்கான், 27, துணி வியாபாரி; கடந்த ஏப்., 28 காலை, 10:00 மணிக்கு தனது வீட்டின் முன் புல்லட்டை நிறுத்தியிருந்தார். அடுத்த நாள் அதிகாலையில் பார்த்த போது புல்லட்டை காண-வில்லை. மர்ம நபர்கள் புல்லட்டை திருடி சென்றதை அறிந்த முகமது யூசுப்கான், ஹட்கோ போலீசில்
புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து,
மர்ம நபர்களை தேடி
வருகின்றனர்.