/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மேட்டூர் அணை நீர்திறப்பு 22,500 கன அடியாக உயர்வு
/
மேட்டூர் அணை நீர்திறப்பு 22,500 கன அடியாக உயர்வு
ADDED : ஜூலை 20, 2025 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழையால், கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்வரத்து நேற்று அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம், வினாடிக்கு, 18,610 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று மாலை, வினாடிக்கு, 28,784 கன
அடியாக அதிகரித்தது.
அதேபோல் நேற்று காலை, வினாடிக்கு, 18,000 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை டெல்டா பாசன நீர்திறப்பு, மாலை, 22,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
மேட்டூர் கால்வாய் பாசனத்துக்கு, 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 119.64 அடி, நீர் இருப்பு, 92.89 டி.எம்.சி.,யாக இருந்தது.