ADDED : ஜன 18, 2024 10:43 AM
கிருஷ்ணகிரி: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின், 107-வது பிறந்த நாளையொட்டி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் தலைமையில், எம்.எல்.ஏ., அசோக்குமார், எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னிப்பன் தலைமையில், எம்.ஜி.ஆர்., நினைவு சமாதியிலுள்ள எம்.ஜி.ஆர்., படத்திற்கும், கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளாப்பள்ளியில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கும் மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் தலைமையிலும், நகர, அ.தி.மு.க,, சார்பில், ரவுண்டானா அருகில் நகர செயலாளர் கேசவன் தலைமையிலும், காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, நகர செயலாளர் விமல் ஆகியோர் தலைமையிலும், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அதேபோல கிருஷ்ணகிரி, அ.தி.மு.க.,மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி தலைமையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று ஓசூரிலுள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தனர்.
* ஊத்தங்கரையில், எம்.ஜி.ஆரின், 107வது பிறந்த நாள் விழா, ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம் தலைமை நடந்தது. ரவுண்டானாவிலுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, மலர் துாவி இனிப்பு வழங்கினர்.