/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 09, 2026 07:17 AM

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட செயலாளர் அண்ணாமலை தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் கோபால், துணைச்செயலாளர் பாஸ்கர் மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் பெருமாள் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு ஊக்கத்தொகையாக ஒரு லிட்டர் பாலுக்கு, 10 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். ஊக்கத்தொகை நிலுவையின்றி மாதந்தோறும் வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு முன், தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களுக்கு, போனஸ் தொகை வழங்க வேண்டும். பாலுக்கான கொள்முதல் விலையை, லிட்டர் ஒன்றுக்கு பசும்பாலுக்கு, 45 ரூபாய், எருமை பாலுக்கு 60 ரூபாய் வழங்க வேண்டும். கால்நடை தீவனம், 50 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷமிட்டனர்.

