/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓடையில் அமைத்த மினி டேங்க் குடிநீரின்றி பொதுமக்கள் அவதி
/
ஓடையில் அமைத்த மினி டேங்க் குடிநீரின்றி பொதுமக்கள் அவதி
ஓடையில் அமைத்த மினி டேங்க் குடிநீரின்றி பொதுமக்கள் அவதி
ஓடையில் அமைத்த மினி டேங்க் குடிநீரின்றி பொதுமக்கள் அவதி
ADDED : நவ 23, 2025 01:19 AM
ஏரியூர், ஏரியூர் அருகே, ஓடைக்கு நடுவே அமைக்கப்பட்ட மினி டேங்கை சுற்றி மழை நீர் சூழ்ந்ததால், பொதுமக்கள், குடிக்க தண்ணீர் பிடிக்க இயலாமல் அவதிப்படுகின்றனர்.தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொன்னக்குட்ட அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சம்பாடி கிராமத்தில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஓடை பகுதியில், மினி டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.
சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால், அப்பகுதியிலுள்ள குட்டைகள் நிரம்பி, ஓடை வழியாக தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஓடையில் அமைக்கப்பட்ட மினி டேங்க்கின் அடித்தளம் மூழ்கி தண்ணீர் தேங்கி நிற்பதால், மின்மோட்டார் இயக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் தண்ணீர் பிடிக்க இயலாமல், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள மோட்டார் அறையில் தேங்கும் நீரால் ஏதேனும் மின்பாதிப்பு ஏற்படும் முன், உரிய நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகத்திற்கு அப்
பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

