ADDED : ஜூன் 28, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தனப்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கம் மற்றும் புவியியல் துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் அதிகாரிகள், உத்தனப்-பள்ளியில் உள்ள ஓசூர் சாலையில், தனியார் பெட்ரோல் பங்க் அருகே நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரியில் சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 2 யூனிட் கற்களை கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகா-ரிகள், உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.