/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தலைகீழாக கவிழ்ந்த மினிபஸ் -உயிர் தப்பிய ஓம் சக்தி பக்தர்கள்
/
தலைகீழாக கவிழ்ந்த மினிபஸ் -உயிர் தப்பிய ஓம் சக்தி பக்தர்கள்
தலைகீழாக கவிழ்ந்த மினிபஸ் -உயிர் தப்பிய ஓம் சக்தி பக்தர்கள்
தலைகீழாக கவிழ்ந்த மினிபஸ் -உயிர் தப்பிய ஓம் சக்தி பக்தர்கள்
ADDED : ஜன 02, 2024 10:38 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, ஈரோடு மாவட்டம் கௌந்தம்பட்டி குட்டிபாளையத்தை சேர்ந்த, 30 பேர், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை அணிந்து, 2 மினி பஸ்சில் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு மேல்மருவத்துார் சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த, காட்டேரி பகுதி சாலையில், 2 மினி பஸ்சும் சென்று
கொண்டிருந்தது.அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஒரு மினி பஸ், சாலை தடுப்பு சுவரில் மோதி, தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பயணித்த, 2 குழந்தைகள், 2 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் உட்பட, 17 பேர் காயமடைந்தனர்.
அவர்களை, 108 அவசர கால ஆம்புலன்ஸ் மூலம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,
அய்யாசாமி, 45, மவுனிகா, 19, செல்வி, லட்சுமி, சண்முகவள்ளி ஆகியோர், மேல்சிகிச்சைக்காக ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் அனைவரும் காயமடைந்த நிலையில், உயிர் சேதமின்றி 17, பக்தர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

