தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாயமாகி மீட்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள்

மாயமாகி மீட்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள்

மாயமாகி மீட்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள்


ADDED : ஜூலை 25, 2025 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2025 12:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை :ஊத்தங்கரை அடுத்த, சாம்பல்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும், 12 மற்றும் 13 வயதுடைய இரு மாணவர்கள், ஊத்தங்கரை அரசு ஆண்கள் பள்ளியை சேர்ந்த, 11 வயது மாணவர் ஆகிய மூவர் கடந்த, 22 மாலை, 5:00 மணியளவில் மாயமாகினர். அவர்களின் பெற்றோர், ஊத்தங்கரை போலீசில் புகாரளித்தனர்.

விசாரணையில், மாணவர்கள், திருவண்ணாமலை செல்லும் தனியார் பஸ்சில், சாமல்பட்டி பஸ் ஸ்டாப்பில் ஏறி, செங்கம் பஸ் ஸ்டாண்டில் மாலை, 6:10 மணியளவில் இறங்கியது தெரியவந்தது. நேற்று முன்தினம் மாலை அவர்களை ஊத்தங்கரை போலீசார் மீட்டு பத்திரமாக அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களை விரைந்து மீட்ட தனிப்பிரிவு போலீசாருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us