தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு


ADDED : செப் 22, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 04:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராயக்கோட்டை; கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே கூத்தனப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணப்பா மனைவி சுந்தரம்மாள், 84. கடந்த, 12ம் தேதி மதியம், 3:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மகன் சிவக்குமார், 54, கடந்த, 16ம் தேதி கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்ப-திந்து, மாயமான சுந்தரம்மாளை தேடி வந்தனர்.

இந்நிலையில், ராயக்கோட்டை அருகே கொத்துார் பகுதியிலுள்ள சம்பத்குமார் என்பவரது விவசாய கிணற்றில், நேற்று முன்தினம் மூதாட்டி சடலம் மிதந்தது. அதை மீட்டு, ராயக்கோட்டை போலீசார் விசாரித்தபோது, அவர் மாயமான சுந்-தரம்மாள் என தெரிந்தது. மனநலம் பாதித்த சுந்த-ரம்மாள், வீட்டிலிருந்து வெளியேறி, கொத்துார் பகுதியில் சுற்றித்திரிந்த போது, கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது. ராயக்-கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us