/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உங்களை தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சி: எம்.எல்.ஏ., ஆய்வு
/
உங்களை தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சி: எம்.எல்.ஏ., ஆய்வு
உங்களை தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சி: எம்.எல்.ஏ., ஆய்வு
உங்களை தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சி: எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : அக் 26, 2025 01:10 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட முனீஸ்வர் நகர், நாதன் நகர், சாய் லே அவுட் பகுதிகளில், உங்களை தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஓசூர் மாநகர மேயர் சத்யா, தி.மு.க., கவுன்சிலரும், பொது சுகாதார குழு தலைவருமான மாதேஸ்வரன் முன்னிலை வகித்தனர். ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் தலைமை வகித்து ஆய்வு செய்தார்.
அப்போது, 23 குடியிருப்பு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், சாலை, தெருவிளக்கு, சாக்கடை கால்வாய், சுத்தமான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு, எம்.எல்.ஏ., பிரகாஷிடம் மனு வழங்கினர். அதை பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதேபோல், 12 வது வார்டு பாகலுார் ஹட்கோ, 13 வது வார்டு கிருஷ்ணா நகர், 14 வது வார்டு
லட்சுமி நாராயணா நகர், 15 வது வார்டு தர்கா, 16 வது வார்டு அரசனட்டி, 17 வது வார்டு எம்.எம்., நகர், 18 மற்றும் 20 வது வார்டு மூக்கண்டப்பள்ளி, 21 வது வார்டு மத்தம், 23 வது வார்டு பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ ஆகிய பகுதிகளில், எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆய்வு செய்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும், தமிழக அரசின் நான்காண்டு சாதனை புத்தகங்களை மக்களுக்கு வழங்கினார்.

