பருவமழை முன்னெச்சரிக்கை தீயணைப்பு துறை விழிப்புணர்வு
பருவமழை முன்னெச்சரிக்கை தீயணைப்பு துறை விழிப்புணர்வு
ADDED : அக் 19, 2024 01:22 AM
பருவமழை முன்னெச்சரிக்கை
தீயணைப்பு துறை விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி, அக். 19-
கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி பஞ்., தின்னக்கழினியில், தீயணைப்புத்துறை சார்பில் நடந்த, பேரிடர் காலத்தில் மீட்பு பணிகள் குறித்த, ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சரயு பார்வையிட்டார். அப்போது, தீயணைப்பு வீரர்கள் படகு, பாதுகாப்பு கவச உடை, கயிறு, மரம் அறுக்கும் இயந்திரங்கள், கான்கிரீட் உடைப்பு கருவிகள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் மூலம் பேரிடர் மீட்பு காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்தும், மேலும், வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை, மீட்பு குழுக்கள் மூலம் மீட்டு, அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் செயல்விளக்கம் அளித்தனர்.
கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சக்திவேல், கிருஷ்ணகிரி தாசில்தார் பொன்னாலா, பி.டி.ஓ., சிவபிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
