/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பருவமழை முன்னேற்பாடுகள் தீயணைப்பு துறை செயல்விளக்கம்
/
பருவமழை முன்னேற்பாடுகள் தீயணைப்பு துறை செயல்விளக்கம்
பருவமழை முன்னேற்பாடுகள் தீயணைப்பு துறை செயல்விளக்கம்
பருவமழை முன்னேற்பாடுகள் தீயணைப்பு துறை செயல்விளக்கம்
ADDED : ஜூலை 24, 2025 01:16 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த கப்பல்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த செயல்விளக்கத்தை செய்து காட்டினர்.
பர்கூர் நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்து கூறுகையில், மழைக்காலங்களில் பள்ளி மாணவ, மாணவியர் மின்கம்பங்கள் அருகே நிற்கக்கூடாது, வெளியே செல்லும்போது பெற்றோரை அழைத்து செல்ல வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மழைக்காலங்களில் நீர்நிலைகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்க வேண்டும் என செயல்விளக்கம் செய்து காட்டினர். மாணவ, மாணவியருக்கும், இது குறித்த பயிற்சி அளித்தனர்.
பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்து குறித்து, தீயணைப்பு துறைக்கு, 24 மணி நேரமும், 04343 - 265601, 265901, மற்றும் 94450 86363, 73050 95870, என்ற எண்களிலும் இலவச எண்களான, 101 மற்றும் 112 ஆகியவற்றில் தொடர்பு கொண்டால், தாமதமின்றி வந்து மீட்கப்படும், எனவும் தெரிவித்தனர். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.