/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கணவரின் நண்பருடன் தொடர்பு2 குழந்தைகளின் தாய் தற்கொலை
/
கணவரின் நண்பருடன் தொடர்பு2 குழந்தைகளின் தாய் தற்கொலை
கணவரின் நண்பருடன் தொடர்பு2 குழந்தைகளின் தாய் தற்கொலை
கணவரின் நண்பருடன் தொடர்பு2 குழந்தைகளின் தாய் தற்கொலை
ADDED : ஏப் 23, 2025 01:17 AM
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, கெட்டம்பட்டியை சேர்ந்தவர் சிரஞ்சீவி, 36. அவரின் மனைவி ரோஜா, 33. இவர்களுக்கு, 12, 10 வயதில் இரண்டு மகன்கள். சிரஞ்சீவியின் நண்பர் கிருஷ்ணகிரி அருகே கணவாய்பட்டியை சேர்ந்த ராகுல், 33. இருவரும் கூட்டாக மத்துார் அடுத்த, டோல்கேட் பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தனர். அப்போது சிரஞ்சீவி மனைவி ரோஜாவிற்கும், ராகுலுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு ரோஜா, ராகுலை வீட்டிற்கு வர அழைத்துள்ளார். ராகுல் மறுத்ததால் ரோஜா விரக்தியடைந்தார். இதனால் ரோஜாவை, ராகுல் மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, அவரது போன் 'சுவிட்ச் ஆப்' என வந்தது. சந்தேகமடைந்த ராகுல், ரோஜாவின் வீட்டிற்கு இரவு, 11:00 மணியளவில் சென்று பார்த்தார்.
கதவு உள்பக்கம் தாழிட்டு இருந்ததால், ராகுல் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு ரோஜா துாக்கில் தொங்கி சடலமாக கிடந்தார். மத்துார் போலீசார், ரோஜாவின் உடலை கைப்பற்றி விசாரித்ததில், கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, ரோஜா கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

