ADDED : ஆக 19, 2026 05:21 AM
அ நிறம் | அளவு
தளி:கிருஷ்ணகிரி
மாவட்டம், தளி அருகே பேலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் சித்தலிங்கப்பா.
விவசாயி; இவரது மனைவி பார்வதம்மா, 35. இவர்களுக்கு மாதேஷ் என்ற, 5
வயது மகன் உள்ளார். தாய், மகன் இருவரும் நேற்று காலை விவசாய நிலத்தில்
நின்றிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை
யானை, தாய், மகனை விரட்டியது. யானையிடமிருந்து தப்பி ஓடிய இருவரும்,
அங்கிருந்த ஒரு குழிக்குள் விழுந்து படுகாயமடைந்தனர்.யானையை,
வனத்துறையினர் காப்புக்காட்டிற்குள் விரட்டினர். அப்பகுதி மக்கள்
படுகாயமடைந்த தாய், மகனை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு
மருத்துவமனைக்கு அனுப்பினர். தளி போலீசார் விசாரித்து
வருகின்றனர்.
