வெராண்டா ரேஸ் பயிற்சி மையம் எம்.பி., தம்பிதுரை திறந்து வைப்பு
வெராண்டா ரேஸ் பயிற்சி மையம் எம்.பி., தம்பிதுரை திறந்து வைப்பு
ADDED : நவ 17, 2026 05:25 AM
கிருஷ்ணகிரி; வேளாங்கண்ணி அகாடமியின் கீழ் செயல்படும், 'வெராண்டா ரேஸ்' நிறுவனத்தின் புதிய போட்டித்தேர்வு பயிற்சி மையம், திருப்பத்துாரில் துவங்கப்பட்டது. இந்த புதிய பயிற்சி மையத்தை, ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை திறந்து வைத்து பேசியதாவது:
நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற மாணவர்களும் போட்டித்தேர்வில் சாதிக்க வேண்டும் என்பதே இப்பயிற்சி மையத்தின் நோக்கமாகும். திருப்பத்துார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் அரசு போட்டித்தேர்வுக்காக தொலைதுார நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியத்தை குறைத்து, தங்கள் சொந்த ஊரில் தரமான பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பை, 'வெராண்டா ரேஸ்' ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு பேசினார்.
இதில், ஜோலார்பேட்டை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வீரமணி பேசுகையில், ''மாணவர்கள் இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி, விடாமுயற்சியுடன் பயின்று அரசு பணிகளில் வெற்றி பெற வேண்டும்,'' என்றார்.
வெராண்டா ரேஸ் பயிற்சி மைய கிளை தலைவர் தனபால், வேளாங்கண்ணி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன், வெராண்டா ரேஸ் வணிக வளர்ச்சி துணை தலைவர் ஆழ்வாரப்பன், மண்டல மேலாளர் செந்தில் கணேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
