ADDED : ஜூலை 10, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, :போச்சம்பள்ளி அடுத்த, காட்டாகரம், வேடர்தட்டக்கல் பகுதியில், போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சந்துாருக்கு டிப்பர் லாரியில், எவ்வித அனுமதியுமின்றி எம்.சாண்ட் எடுத்து வரப்பட்டது.லாரியை பறிமுதல் செய்து போச்சம்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., லெனின் புகார் படி, போச்சம்பள்ளி போலீசார், தப்பியோடிய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

