/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மல்பெரி, பட்டுப்புழு தொழில்நுட்ப பயிற்சி
/
மல்பெரி, பட்டுப்புழு தொழில்நுட்ப பயிற்சி
ADDED : செப் 05, 2024 03:37 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டார வேளாண் துறையின் அட்மா திட்டம் சார்பில், முகளூர் கிராமத்தில், விவசாயிகளுக்கு மல்பெரி சாகுபடி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்-பங்கள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் உதவி இயக்-குனர் தலைமை வகித்தார். ஓசூர் பட்டுவளர்ச்சித்துறை இளநிலை ஆய்வாளர் சுரேஷ், மல்பெரி தொழில்நுட்பங்கள், பூச்சி நோய் கட்டுப்படுத்தும் முறைகள், மானிய திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார். ஓசூர் துணை வேளாண் அலுவலர் முருகேசன், உதவி வேளாண் அலுவலர் சுந்தர்ராஜ், அட்மா திட்ட வட்டார தொழில்-நுட்ப மேலாளர் சுகுணா உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடு-களை, உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகம் செய்திருந்தார்.