/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பேரூராட்சி பணியாளர்கள் தீபாவளி கொண்டாட்டம்
/
பேரூராட்சி பணியாளர்கள் தீபாவளி கொண்டாட்டம்
ADDED : நவ 01, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரூராட்சி பணியாளர்கள்
தீபாவளி கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி, நவ. 1-
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, தீபாவளி பரிசாக புத்தாடை, மழைக்காலத்திற்காக ரெயின்கோட் மற்றும் இனிப்பு, காரம் ஆகியவை வழங்கப்பட்டன.
பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார், அனைவருக்கும் தீபாவளி பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து, அவர் தலைமையில், அனைவரும் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர். இதில், தலைமை எழுத்தர் வெங்கடேசன், துணைத்தலைவர் மாலினி மாதையன், கவுன்சிலர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள்
பங்கேற்றனர்.

