ADDED : செப் 22, 2026 04:36 AM
ஓசூர்; ஓசூர் இன்னர் ரிங்ரோட்டில், முனீஸ்வர் நகர், வ.உ.சி., நகர், நியூ ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ ஆகிய பகுதிகள் சந்திக்கும் இடத்தை, முனீஸ்வர் நகர் சர்க்கிள் என மக்கள் அழைத்து வந்தனர். ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அப்பகுதிக்கு, 'தந்தை பெரியார் சதுக்கம்' என பெயர் மாற்றப்பட்டது. இதற்கு ஹிந்து அமைப்-புகள் மற்றும் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரி-வித்து வருகின்றனர். 'முனீஸ்வர் நகர் சர்க்கிள்' என பெயர் வைக்க வலியுறுத்தி, சட்ட போராட்டம் நடத்த, முனீஸ்வர் நகர் சர்க்கிள் மீட்பு குழு என, ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு சார்பில், அதன் தலைவர் ராம-சாமி தலைமையில், 'முனீஸ்வர் நகர் சர்க்கிள்' என பெயரை மாற்றக்கோரி, ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, காகிதத்தால் முகத்தை மூடி நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மகளிரணி நிர்வாகி முத்துலட்சுமி, இணை தலைவர் பிரபாகர் மற்றும் நிர்வாகிகள் பரமேஷ்-வரன், சிவசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்-றனர்.
