தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அரசு கல்லுாரி மாணவர்களுக்கு அருங்காட்சியகம் குறித்த பயிற்சி

அரசு கல்லுாரி மாணவர்களுக்கு அருங்காட்சியகம் குறித்த பயிற்சி

அரசு கல்லுாரி மாணவர்களுக்கு அருங்காட்சியகம் குறித்த பயிற்சி


ADDED : ஜூன் 12, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 04:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; அரசு கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, அருங்காட்சியகம் தொடர்பான ஒரு நாள் பயிற்சி நேற்று நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சிய-கத்தில், பாலக்கோடு அரசு கல்லுாரி மாணவ, மாணவியர், 29 பேருக்கு, ஒரு நாள் அருங்காட்சி-யகம் தொடர்பான பயிலரங்கம் நேற்று நடந்தது. பயிற்சியை, காப்பாட்சியர் சிவக்குமார் வழங்-கினார். இதில், அருங்காட்சியகத்தின் தோற்றம், வரலாறு, அவற்றின் பரிணாமங்கள், தற்போதைய காலத்தில் அருங்காட்சியகங்களின் முக்கியத்-துவம், அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தி உள்ள அரும் பொருட்கள் சேகரிக்கும் முறைகள் தொடர்பான விபரங்கள், முதல் அமர்வில் எடுத்-துரைக்கப்பட்டது. இரண்டாவது அமர்வில், வரட்டனப்பள்ளி புதிய கற்கால கல்லாயுதங்கள், சங்ககால பானைகள், செங்கல், சிறப்பு மிக்க அகரம் மற்றும் பாரூர் செல்-லகுட்டப்பட்டி ஜெல்லிக்கட்டு நடுகற்கள், மாவட்ட வரலாற்றை தாங்கியுள்ள பூர்வாதிராயர் கல்-வெட்டுகள், புதைப்படிவங்கள், பழங்குடி மக்களின் வாழ்வியல் பொருட்கள், பதப்படுத்தி வைத்துள்ள விலங்கினங்கள் தொடர்பான கருத்துகள், அரும்-பொருட்களை பாதுகாத்தல் தொடர்பான ஓலைச்-சுவடிகளை, வேதியல் முறையில் பாதுகாத்தல் குறித்து, பயிற்சி வழங்கப்பட்டது. கவுரவ விரிவு-ரையாளர்கள் பாலாஜி, மஞ்சுநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, அருங்-காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள்

ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us