/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவியருக்கு அருங்காட்சியக பயிலரங்கம்
/
மாணவியருக்கு அருங்காட்சியக பயிலரங்கம்
ADDED : டிச 10, 2025 10:37 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சிய-கத்தில், மத்துார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தொல்லியல் மன்ற மாணவியர், 72 பேருக்கு, ஒரு நாள் அருங்காட்சியக பயிலரங்கம் நடந்தது. இதில், அருங்காட்சியக தோற்றம், வரலாறு, அவற்றின் பரிணாமங்கள், அரும் பொருட்கள் சேகரிக்கும் முறைகள் குறித்து விளக்கம் அளித்-தனர்.
தொடர்ந்து, அருங்காட்சியகத்தில் உள்ள புதிய கற்கால கல்லாயுதங்கள், சங்ககால பானைகள், செங்கல், அகரம் மற்றும் பாரூர் செல்லகுட்டப்-பட்டி ஜெல்லிக்கட்டு நடுகற்கள், பீமாண்டப்பள்ளி நடுகல், எடவனஹள்ளி ஆநிரை மீட்டல் நடுகல், மாவட்ட வரலாற்றினை தாங்கியுள்ள பூர்வாதி-ராயர் கல்வெட்டுகள், புதைப்படிவங்கள், கோட்-டையை பாதுகாக்க பயன்பட்ட பீரங்கிகள், கல் குண்டுகள், ஆயுதங்கள், கலை சார்ந்த தெருக்-கூத்து, பழங்குடி மக்களின் வாழ்வியல் பொருட்கள், பதப்படுத்தி வைத்துள்ள விலங்கி-னங்கள் மற்றும் தொல்லியல் துறையில் அக-ழாய்வு செய்யப்பட்ட மயிலாடும்பாறை இரும்பு வாள், சென்னானுார் இடைகற்கால கற்கருவிகள், தமிழி எழுத்து பானை ஓடுகள் தொடர்பாக, காப்-பாட்சியகர் சிவக்குமார் விளக்கினார்.
முடிவில், அகழாய்வு மேற்கொள்வது குறித்து மாணவிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்-பித்தனர். தலைமை ஆசிரியர் ஆனந்திமாலா, வரலாற்று ஆசிரியர் சவுந்தரி மற்றும் ஆசிரி-யர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.

