ADDED : மார் 22, 2026 06:53 AM

கிருஷ்ணகிரி:இஸ்லாமிய
மார்க்கத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான்
பண்டிகையை முன்னிட்டு, ஒரு மாத கால புனித ரமலான் நோன்பை நிறைவு
செய்யும் விதமாக, ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்பட்டதை தொடர்ந்து
இந்த விழா நேற்று கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரியில்,
ராயக்கோட்டை சாலையிலுள்ள ராஜிவ் நகர், வெங்க-டாபுரம், நமாஸ் பாறை
உள்பட, 13 இடங்களில் உள்ள ஈத்கா மைதானங்களில், ரம்ஜான்
பண்டிகையையொட்டி நேற்று காலை, 6:30 மணி முதல், 10:00 மணி வரை
இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இதில், 7,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். அதே போல்,
பெரியார் நகர் அருகிலுள்ள மசூதியில் பெண்கள் மட்டும் பங்-கேற்ற சிறப்பு
தொழுகை நடந்தது. இஸ்லாமியர்கள் தங்கள் வீடு-களில் பிரியாணி சமைத்து,
உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர்.
இதேபோல்,
பர்கூர், காவேரிப்பட்டணம், வேப்பனஹள்ளி, ஊத்தங்கரை, ராயக்கோட்டை,
ஜெகதேவி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள்,
நேற்று சிறப்பு தொழு-கையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர்
கட்டியணைத்து ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
*
ஊத்தங்கரை சுன்னத் ஜமாத்தில் இருந்து, இஸ்லாமியர்கள் நேற்று
ஊர்வலமாக சென்று அரசு விளையாட்டு மைதானம் எதி-ரிலுள்ள, ஜூம்மா
மசூதியில் கூட்டு தொழுகை செய்தனர். இதில், 1,000க்கும் மேற்பட்டோர்
சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தொழுகை முடிந்ததும், உலக நன்மை
வேண்டியும், மழை பொழிய வேண்டும் என்றும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
பிறகு ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து தங்களது அன்பை பரிமாறிக்
கொண்டனர். இதில், முத்தவல்லி பதிவுஜமா, செய-லாளர் சாகுல் அமீது,
பேரூராட்சி தலைவர் அமானுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
