ADDED : மே 29, 2026 03:09 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ராஜிவ் நகரிலுள்ள ஈத்கா மைதானம் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள மைதானத்தில், பக்ரீத் பண்டிகை-யையொட்டி இஸ்லாமியர்கள் நேற்று காலை, 8:00 மணிக்கு, சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாழ்த்து பரிமாறிக் கொண்டனர். வீட்டில் அசைவ உணவுகளை சமைத்து, உறவினர்களுக்கும், நண்-பர்களுக்கும் பகிர்ந்து அளித்து, பக்ரீத் பண்டி-கையை கொண்டாடினர். நேற்று புத்தாடை உடுத்தி, இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
* ஊத்தங்கரை சுன்னத் ஜமாத் மசூதியிலிருந்து நுாற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று, சுன்னத் ஜமாத் மைதானத்தை அடைந்-தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த திடலில், ஜமாத்தின் முத்தவல்லி தலைமையில், 1,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.* தர்மபுரி நகர அனைத்து மசூதிகள் கூட்ட-மைப்பின் சார்பில், கிருஷ்ணகிரி சாலையிலுள்ள ஈத்கா மைதானத்தில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஒருவருக்கொருவர் கட்டி தழுவி வாழ்த்து பரிமாறிக் கொண்டனர். பின், ஆட்டி-றைச்சியை ஏழைகளுக்கு குர்பானியாக வழங்-கினர்.
அதேபோல், பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, நல்லம்பள்ளி, அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட இடங்களில் ஆங்-காங்கே உள்ள ஈத்கா மைதானம், பள்ளிவாசல்-களில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்-டனர்.
