/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நாகம்மா கோவில் கரகம் உற்சவ விழா
/
நாகம்மா கோவில் கரகம் உற்சவ விழா
ADDED : ஜூலை 29, 2025 01:21 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சின்ன எலசகிரி காமராஜ் நகரிலுள்ள நாகம்மா கோவிலில், 18ம் ஆண்டு பொங்கல் வைத்தல், கூழ் வார்த்தல், கரகம் உற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. காலை, 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, நண்பகல், 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 9:00 மணிக்கு, அம்மனுக்கு காப்பு கட்டுதல், தொடர்ந்து, பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், நாக சதுர்த்தி விழா ஆகியவை நடந்தன.
விழாவில் இன்று நாக பஞ்சமி விழா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக வரும், 3ம் தேதி நண்பகல், 12:00 மணிக்கு, அம்மனுக்கு கிடா வெட்டி சிறப்பு பூஜை நடக்கிறது. 4ம் தேதி காலை மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.