/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேசிய நுாலக வார விழா மாணவர்களுக்கு பரிசு
/
தேசிய நுாலக வார விழா மாணவர்களுக்கு பரிசு
ADDED : நவ 25, 2024 01:34 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட மைய நுாலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து, 57வது தேசிய நுாலக வார விழாவை நேற்று நடத்தி-யது. இதையொட்டி, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வாசகர் வட்ட தலைவர் கமலேசன் வரவேற்றார். மாவட்ட நுாலக அலுவலர் (பொ) கோகிலவாணி தலைமை வகித்தார். பேச்சு போட்டியில், 27, கட்டுரை போட்டியில், 27, கவிதை போட்டியில் 27 என, மொத்தம், 81 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல், 9 இடங்களில் வெற்றி பெற்ற, 27 பேருக்கு, பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதி-யழகன், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதில், மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, நகர செயலாளர் நவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், வாசகர் வட்டத்தை சேர்ந்த ஆசிரியைகள் சகிகலா, நாமகிரி, கலைச்செல்வி, சாம்ராஜ், இந்திராணி, ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் பன்னீர் செல்வம், நுகர்வோர் விழிப்புணர்வு சங்க மாநிலத் தலைவர் ஜாய் உள்பட பலர் பங்கேற்றனர். தேசிய நுாலக வார விழாவையொட்டி, நேற்று முன்தினம் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில், 115 பேர் பங்கேற்றனர்.