/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம்; நாளந்தா பள்ளி மாணவர்கள் பேரணி
/
தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம்; நாளந்தா பள்ளி மாணவர்கள் பேரணி
தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம்; நாளந்தா பள்ளி மாணவர்கள் பேரணி
தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம்; நாளந்தா பள்ளி மாணவர்கள் பேரணி
ADDED : டிச 03, 2025 08:03 AM

கிருஷ்ணகிரி: தேசிய மாசு கட்டுப்பாட்டு தினத்தையொட்டி, நாளந்தா பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அண்ணாதுரை சிலை எதிரில், தேசிய மாசு கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு, நாளந்தா இன்டர்நேஷனல் இன்ட்ராக்ட் கிளப் சார்பில், மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. எஸ்.ஐ., சத்தியமூர்த்தி, நாளந்தா இன்ஸ்டிட்யூட் இயக்குனர் டாக்டர் புவியரசன், ரோட்டரி கிளப் தலைவர் அசோக் நாயுடு, செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர்.
இப்பேரணி, பெங்களூரு சாலை, தர்மராஜா கோவில் சாலை வழியாக, காந்தி சிலையை கடந்து காந்தி சாலையில் நிறைவு பெற்றது. பேரணியில், 'பசுமையான எதிர்காலம்' என்ற தலைப்பில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பதாகை ஏந்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசுகட்டுப்பாடு மற்றும் நிலையான வாழ்வின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். இதில், நாளந்தா பள்ளி தலைமை ஆசிரியர் பிரமோதினி, ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.