/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேசிய மாசு கட்டுப்பாட்டு தின பேரணி
/
தேசிய மாசு கட்டுப்பாட்டு தின பேரணி
ADDED : டிச 04, 2025 07:04 AM

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், தேசிய மாசு கட்டுப்பாட்டு தினத்தையொட்டி, நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பள்ளி அறிவியல் ஆசிரியர் சங்கர் பேரணியை துவக்கி வைத்து மாணவர்களிடம் பேசியதாவது: இந்தியாவில் கடந்த, 1984 டிச., 2ல், போபால் விஷவாயு விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. பட்டாசு வெடித்தல், சாலையில் ஓடும் வாகனங்கள், தொழிற்சாலைகள் மூலம் வாயுக்கசிவு போன்ற காரணங்களால் மாசு ஏற்படுகிறது. தற்போது மாசு பிரச்னை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீர்நிலைகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் மற்றும் எச்சங்கள் கலப்பதால் நீர் மாசுபடுகிறது. இந்தியாவில் தினமும், 25,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க, நாம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பள்ளியில் துவங்கிய பேரணி, குல்நகர் வழியாக ஜாகிர் வெங்கடாபுரம் பகுதியை சுற்றிக்கொண்டு மீண்டும் பள்ளிக்கு வந்தனர். வழியில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டன. பள்ளி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா, ஆசிரியர்கள் மற்றும், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

