/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் சப்-கலெக்டரிடம் நாவிதர் சங்கத்தினர் மனு
/
ஓசூர் சப்-கலெக்டரிடம் நாவிதர் சங்கத்தினர் மனு
ADDED : டிச 16, 2025 06:19 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்த நாவிதர் நலச்சங்கத்தினர், சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தியிடம் கோரிக்கை மனு வழங்கினர். தொடர்ந்து, அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
தளி பகுதியில் நாவிதர் சமுதாயத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் பரம்பரை பரம்பரையாக முடி திருத்தும் கடைகள் வைத்து தொழில் நடத்தி வருகிறோம். இப்பகுதியில் வேறு சமூகத்தை சேர்ந்தவர், புதிதாக ஹைடெக் தொழில் நுட்பத்தில் முடி திருத்தும் கடையை திறக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. எனவே, புதிதாக அமைக்கப்பட உள்ள முடி திருத்தும் கடைக்கு அனுமதி வழங்க கூடாது. அந்த கடை திறப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.இதுபோன்ற ஹைடெக் முறையில் கடைகள் திறக்கப்பட்டால், அங்கு வேறு மாநிலத்தவர் பணியில் அமர்த்தப்பட்டு, குறைந்த கட்டணத்தில் முடிதிருத்தம் செய்து விடுகின்றனர். இதன் காரணமாக இங்குள்ள முடிதிருத்தம் தொழில் செய்பவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். நாவிதர் சமுதாய குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.
இவ்வாறு கூறினர்.

