ADDED : அக் 05, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்களில் நவராத்திரி விழா
கிருஷ்ணகிரி, அக். 5-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில், நவராத்திரி விழா நேற்று முன்தினம் இரவு துவங்கியது. இதையொட்டி நேற்று காலை, கிருஷ்ணகிரி பழையபேட்டை பிரசன்ன பார்வதி சமேத சோமேஸ்வரர் கோவிலில், துர்கை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம், ஆராதனை மாலை, 6:00 மணிக்கு நடந்தது. பிரசன்ன பார்வதி அம்பிகைக்கு, 1,008 நாம குங்கும அர்ச்சனை நடந்தது.
இதே போல், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவீதியில் உள்ள துளுக்காணி மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபி ேஷகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைத்து, பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.