/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'பணத்தை சுருட்டி விட்டு கட்சியிலிருந்து விலகிட்டாரு' மண்டல செயலாளர் மீது நா.த.,கட்சியினர் குற்றச்சாட்டு
/
'பணத்தை சுருட்டி விட்டு கட்சியிலிருந்து விலகிட்டாரு' மண்டல செயலாளர் மீது நா.த.,கட்சியினர் குற்றச்சாட்டு
'பணத்தை சுருட்டி விட்டு கட்சியிலிருந்து விலகிட்டாரு' மண்டல செயலாளர் மீது நா.த.,கட்சியினர் குற்றச்சாட்டு
'பணத்தை சுருட்டி விட்டு கட்சியிலிருந்து விலகிட்டாரு' மண்டல செயலாளர் மீது நா.த.,கட்சியினர் குற்றச்சாட்டு
ADDED : அக் 08, 2024 05:03 AM
கிருஷ்ணகிரி: நிர்வாகிகள், பொதுமக்களிடம் பல கோடி ரூபாயை சுருட்டிய, கிருஷ்ணகிரி, நா.த.க., மண்டல செயலர் கரு.பிரபாகரன், கட்சியி-லிருந்து விலகி உள்ளதாக' அக்கட்சியினர் குற்றம் சாட்டி உள்-ளனர்.
கிருஷ்ணகிரி, நா.த.க., மத்திய மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள், 20க்கும் மேற்பட்டோர் நேற்று, கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் கூறியதாவது:கரு.பிரபாகரன், கடந்த வாரத்தில் கட்சியின் தலைமை ஒருங்கி-ணைப்பாளர் சீமான் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி கட்சி-யிலிருந்து விலகுவதாக கூறினார். ஆனால் அவருடன் வந்த யாரும், கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், 50 ஓட்டுச்சாவடிக்கு ஒரு பொறுப்பாளர் என, கட்-சியில் பலருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அதை ஏற்றுக்-கொள்ள முடியாத கரு.பிரபாகரன், தான் கட்சி பெயரை கூறி சம்-பாதிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் பேசியுள்ளார். கோழிப்பண்ணை, உள் அரங்குகள் மற்றும் சீட்டு நடத்துவதாக கூறி நிர்வாகிகளிடம், பல லட்ச ரூபாய் பெற்று ஏமாற்றினார். 'கிரிப்டோ கரன்சி'யில் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்-கூறி, நிர்வாகிகள், பல மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்க-ளிடம், 5 கோடி ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து, அவர் மீது, 15க்கும் மேற்பட்டோர் புகாரளித்தும், போலீசார் வழக்கு பதியவில்லை. பள்ளி மாணவியர் பலாத்கார வழக்கில் கைதான சிவராமனுடன் மிக நெருக்கமாக இருந்தார். அவர் நடத்திய போலி என்.சி.சி., முகாமிலும் பங்கேற்றுள்ளார். இதையெல்லாம் நாங்கள் தலைமைக்கு புகாராக கூறினோம். இது குறித்து விசாரித்த சீமான், கரு.பிரபாகரனை அழைத்து கண்-டித்தார்.இந்நிலையில், தன் குட்டு வெளிப்படும் என பயந்து, பணத்தையும் சுருட்டிவிட்டு, சீமான் மீது குற்றம் சாட்டி கட்சியி-லிருந்து விலகுவதாக கூறியுள்ளார். அவரை கட்சியிலிருந்து விலக்கி, எங்கள் கட்சியின் ஒரு லெட்டர்பேடை தலைமை வீணாக்க விரும்பவில்லை. நிர்வாகிகள், பொதுமக்களை ஏமாற்-றிய பணத்தை கரு.பிரகாரன் எங்கு மறைத்துள்ளார் என தெரிய-வில்லை. இது குறித்து மாவட்ட போலீசார் விசாரித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கிருஷ்ணகிரி, நா.த.க., மத்திய மாவட்ட செயலாளர் தம்பிதுரை, கிருஷ்ணகிரி தொகுதி செயலாளர் நரேஷ்குமார், கிருஷ்ணகிரி மேற்கு தொகுதி தலைவர் அருள்குமார் மற்றும் பலர் உடனிருந்-தனர்.
இது குறித்து கிருஷ்ணகிரி, நா.த.க., மண்டல செயலாளர் கரு.பிர-பாகரன் கூறியதாவது: கடந்த, 8 ஆண்டுகளில் கோழிப்பண்ணை நடத்தி ஏற்பட்ட நஷ்டத்திற்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்-பீடு வழங்கினேன். சீட்டு நடத்தி, யாரையும் மோசடி செய்ய-வில்லை. அதற்கான பொருட்கள் வீடு தேடி சென்று கொடுத்தேன். அதேபோல, 'கிரிப்டோ கரன்சி'யில் முதலீட்டு தொகை பெற்று ஏமாற்றியவர் தொடர்பாக, நான் தான் மாவட்ட எஸ்.பி., மற்றும் சென்னை டி.ஐ.ஜி., அலுவலகங்களில் புகார-ளித்தேன். நான் யாரையும் ஏமாற்றி, பணம் சம்பாதித்திருந்தால், ஏன், ஓட்டு வீட்டில் வசிக்கிறேன். கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றியும், அவரை நம்பி வந்த இளைஞர்களின் பரிதாப நிலை குறித்தும் பேசியதை, சீமானால் பொறுக்க முடியவில்லை. அவர், தன் மனைவியை கட்சியின் அடுத்த தலைவராக்க முயற்-சிக்கிறார். இதையெல்லாம் தட்டிக்கேட்ட என் மீது, கட்சிக்கு உழைக்காத நபர்களை வைத்து, பழிபோட பார்க்கிறார். காலம் இதற்கு பதில் சொல்லும்.
இவ்வாறு, அவர் கூறினார்.