/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் பள்ளியில் மாணவர் சேர்க்கை
/
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் பள்ளியில் மாணவர் சேர்க்கை
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் பள்ளியில் மாணவர் சேர்க்கை
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் பள்ளியில் மாணவர் சேர்க்கை
ADDED : ஜூலை 16, 2025 01:36 AM
ஓசூர், ஓசூர், காமராஜ் காலனியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் (தமிழ் வழி), தமிழக அரசு பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கம் மூலம், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் (இரண்டாம் கட்டம்) நேற்று துவங்கப்பட்டது. எழுத்தறிவு இல்லாத வயது வந்தவர்கள், இத்
திட்டத்தின் மூலம் கல்வியறிவு பெற முடியும்.
இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கி நடந்து வருகிறது. ஓசூர் வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர் பசுவராஜ், தலைமையாசிரியர் (பொறுப்பு) பட்டு ஆகியோர் மாணவர் சேர்க்கையை துவக்கி வைத்தனர். பள்ளி மேலாண்மை குழு தலைவி மாலினி, நிர்வாகிகள் சாமி, சத்யா, சுகன்யா, ரஞ்சிதம், ராஜகுமாரி, ஆசிரியர் ரத்னா, இப்பள்ளிக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்ட கல்வி பயிற்றுனர் நஞ்சுண்டப்பன் அர்ஜூனன்
உட்பட பலர் பங்கேற்றனர்.