ADDED : செப் 24, 2026 01:41 AM

அ நிறம் | அளவு
ஊத்தங்கரை: ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு பின்புறம், இ--சேவை மைய புதிய கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது. 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன இ--சேவை மைய கட்டடத்தை, கிருஷ்ணகிரி ஊத்தங்கரை, த.வெ.க., - எம்.எல்.ஏ., இளையராஜா திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி, த.வெ.க., - எம்.எல்.ஏ., முகுந்தன் கலந்து கொண்டார். த.வெ.க., மாவட்ட இணைச்செயலாளர் தாமோதரன், பொருளாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
