ADDED : ஆக 11, 2025 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் ஒன்றியம், அச்செட்டிப்பள்ளி பஞ்., உட்பட்ட எடப்பள்ளி கிராமத்தில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் பகுதி நேர ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. இதை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று திறந்து வைத்து,
பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்ளை வழங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முனிராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெங்கடசாமி, கிளை செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், இடையநல்லுார் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.

