sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : ஜன 22, 2024 11:04 AM

Google News

ADDED : ஜன 22, 2024 11:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முருகன் கோவிலில்

தைப்பூச திருவிழா

கிருஷ்ணகிரி, காட்டிநாயனப்பள்ளி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 87ம் ஆண்டு தைப்பூச பிரம்மோற்சவ விழா கடந்த, 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் உற்சவர் தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. வரும், 25ல் தைப்பூச திருவிழா நடக்கிறது. இதையொட்டி வரும், 25 முதல், 30 வரை தைப்பூச திருவிழா மாட்டுச்சந்தை நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான, 30ல் வானவேடிக்கை நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

முத்துமாரியம்மன் கோவிலில்

பா.ஜ.,வினர் துாய்மை பணி

அயோத்தியில் இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியிலுள்ள கோவில்களை, பா.ஜ., கட்சியினர் சுத்தம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, ஓசூர் தர்கா அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவிலின் கோபுரம், கருவறை, கதவுகள், சிலைகள் ஆகியவற்றை, தண்ணீரை ஊற்றி, பா.ஜ., வர்த்தக அணி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் மற்றும் மண்டல தலைவர்

தங்கராஜ் தலைமையில், ஏராளமான, பா.ஜ., கட்சி நிர்வாகிகள் நேற்று சுத்தம் செய்தனர். இதேபோல், பல்வேறு இடங்களில், பா.ஜ., கட்சியினர் கோவில்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பல்நோக்கு கட்டடம் திறப்புகிருஷ்ணகிரி, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 2022 - 2023ம் ஆண்டு நிதியில், வேப்பனஹள்ளி ஒன்றியம் ஜீனுார் கிராமத்தில், 7,43,000 ரூபாய் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டது. இதை கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அப்போது, எம்.எல்.ஏ.,விடம் அப்பகுதி மக்கள், ஜீனுாரில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்க வேண்டும். அருகிலுள்ள ஆத்தக்கால்வாய் அருகே, தொட்டி அமைத்து, சீரான குடிநீர் வழங்க வேண்டும். பி.கே.பெத்தனப்பள்ளி பஞ்.,ல் அரை கிலோ மீட்டர் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதாக எம்.எல்.ஏ., உறுதி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, பஞ்., தலைவர் பாதுஷா, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் நடராஜன், முன்னாள் வட்டார தலைவர் முனுசாமி, கிளை செயலாளர்கள் நாகராஜ், சுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்லுாரி மாணவிஉட்பட இருவர் மாயம்

ஓசூர் தாலுகாவை சேர்ந்தவர், 17 வயது சிறுமி; கடந்த, 16ல் இரவு, 8:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை புகார்படி, ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை தேடி வருகின்றனர். உத்தனப்பள்ளி அடுத்த நாகமங்கலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா மகள் கவிதா, 20. தர்மபுரி தனியார் கல்லுாரியில், பி.காம்., இரண்டாமாண்டு படிக்கிறார்; கடந்த, 19ல் மாலை, 6:30 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். உத்தனப்பள்ளி போலீசில் அவரது தந்தை கொடுத்த புகாரில், நாகமங்கலத்தை சேர்ந்த வினோத், 20, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் மாயமானகவிதாவை தேடி வருகின்றனர்.

இலவச கண் சிகிச்சை முகாம்ஓசூர் ரோட்டரி கிளப் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில், ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, முகாமை துவக்கி வைத்தார். இதில், 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 150க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்புரை இருப்பது கண்டறியப்பட்டு, இலவச அறுவை சிகிச்சைக்காக கோவை அழைத்து செல்லப்பட்டனர்.

விபத்தில் விவசாயி பலிகிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த தளி கொத்தனுாரை சேர்ந்தவர் பச்சியப்பா, 65, விவசாயி; இவர், நேற்று முன்தினம் மதியம், ஒசபுரம் கிராமம் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோதியதில் படுகாயமடைந்த பச்சியப்பா, சம்பவ இடத்திலேயே பலியானார். தளி போலீசார் விசாரிக்கின்றனர்.

மாற்றுக்கட்சியினர் 100 பேர்

அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில், மத்துார் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் கலர்பதி, கண்ணண்டஅள்ளி, கெட்டம்பட்டி, வீராச்சி குப்பம், கும்மனுார் ஆகிய கிராமங்களில் இருந்து, அ.ம.மு.க., மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் முத்து கண்ணன், ராகவேந்திரன், கும்மனுார், தி.மு.க., கிளை செயலாளர் ரவிச்சந்திரன், வழக்கறிஞர் அரவிந்தன் ஆகியோர் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க., துணை பொதுச்

செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., முன்னிலையில், அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்துக்

கொண்டனர்.

நிகழ்ச்சியில், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் அமீது, முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி, தேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

வராகி அம்மன் கோவில்

கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த மாரண்டப்பள்ளி அருகே புளுவேலி லேஅவுட்டில், கணபதி மற்றும் வராகி அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காலையில் கணபதி பூஜை, கங்கா பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. பவானி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, கோபுர கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார், ஓசூர் மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்

பிரகாஷ், சூளகிரி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஹேம்நாத், ஆலய நிர்வாகிகள் தேவி, மோகன்பாபு உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.

கருவானுாரில் பா.ஜ., கிளை துவக்கம்

ஊத்தங்கரையை அடுத்த, கருவானுார் கிராமத்தில், பாஜ., கிளை துவக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கருவானுார் கிளைத்தலைவர் குமார் தலைமை வகித்தார். மத்துார் கிழக்கு மண்டல தலைவர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தர்மலிங்கம் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

மண்டல பொதுச்செயலாளர்கள் வேடியப்பன், நாராயணன், மண்டல பார்வையாளர் ஆனந்த், சக்தி கேந்திரா பொறுப்பாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளிலிருந்து விலகிய, 100க்கும் மேற்பட்டோர், பாஜ.,

கட்சியில் இணைந்தனர்.

ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று (ஜன., 22) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இப்பணிகளை ஆய்வு செய்ய, தேர்தல் ஆணையத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள, தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக்கழக நிர்வாக இயக்குனர் பழனிசாமி தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் சரயு முன்னிலையில், சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2024ல் பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், களப்

பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், பெறப்பட்ட படிவங்கள் இறுதி செய்யப்பட்டு பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என, வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு, தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அறிவுரை வழங்கினார்.

கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஓசூர் சார் ஆட்சியிர் பிரியங்கா, ஆர்.டி.ஓ., பாபு, தனி தாசில்தார் ஜெய்சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஓசூரில் தங்கமயில் 57வது கிளை திறப்பு

வாடிக்கையாளர்களுக்கு 5 ஸ்டார் சலுகை

ஓசூரிலுள்ள பாகலுார் சாலையில், தங்கமயில் ஜூவல்லரியின், 57வது கிளை திறப்பு விழா நேற்று நடந்தது. நிர்வாக இணை இயக்குனர் ரமேஷ், கிளையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். திறப்பு விழா சலுகையாக, வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு பவுன் நகைக்கும், 1,500 ரூபாய் தள்ளுபடி, வெள்ளி கிலோவிற்கு, 2,000 ரூபாய் தள்ளுபடி, ஒரு கேரட் வைர நகை வாங்கினால், 1 கிராம் தங்க நாணயம், ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் நிச்சய பரிசு, சேமிப்பு திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சய பரிசு என, 5 ஸ்டார் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம், 29 வரை இச்சலுகை வழங்கப்படும் என, தங்கமயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இக்கிளையின் முதல்தளத்தில் வெள்ளி நகைகள், பாத்திரங்கள், கிப்ட் பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. வெள்ளி, தங்க, வைர ஆபரணங்கள், ரத்தின கற்களில் அமைந்த நகைகள், திருமண நகைகளின் கலெக்ஷன்கள், டிசைன்களை ஒரே இடத்தில் வாங்கலாம். இங்கு, மின்மினி என்ற பெயரில், வைர நகைகள் விற்பனைக்கு உள்ளன. திறப்பு விழாவில், பொதுமேலாளர் அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.

இடியும் அபாயத்தில் ரேஷன்கடை: கிராம மக்கள் அவதி

ஏரிக்கரையில் கட்டியதால், இடியும் அபாயத்திலுள்ள ரேஷன் கடையை அகற்றி, புதிய கடை

கட்டித்தர, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி சின்னஏரிக்கரையில், கடந்த, 2014 - 15ம் ஆண்டு, 7.50 லட்சம் ரூபாய் செலவில், ரேஷன் கடை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. இக்கடையின் மூலம், 1,000க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெற்று வந்தனர்.

ஏரிக்கரையின் ஓரம், 10 அடி பள்ளத்தில் மண்ணைக்கொட்டி ரேஷன் கடை கட்டப்பட்டதால், கடந்த ஓராண்டிற்கு முன், இக்கடையின் ஒரு பகுதி தரைத்தளத்தில் பள்ளம் ஏற்பட்டு, சுவரில் பெரிய அளவில் விரிசல் விழுந்தது. மேலும், கூரையின் சிமென்ட் பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்தன. இதனால், தினமும் ரேஷன் கடை ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றி வந்தனர். இதே நிலையில் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால், கடந்த ஓராண்டிற்கு முன், நேதாஜி சாலையிலுள்ள வாடகை கடைக்கு ரேஷன் கடை மாற்றப்பட்டது.

இதனால் தொலைதுாரம் சென்று, ரேஷன் பொருட்களை சுமந்து வரும் பெண்கள் மற்றும் வயதானவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். எனவே, சேதமடைந்து இடியும் நிலையிலுள்ள ரேஷன் கடையை அகற்றிவிட்டு, உறுதியான புதிய ரேஷன் கடையை கட்டித்தர, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'ஜாதிவாரி கணக்கெடுப்பை

அரசு உடனடி நடத்த வேண்டும்'

''தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை, அரசு உடனடியாக நடத்த வேண்டும்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.

தர்மபுரி மாவட்டம், நல்லானுாரில் நடந்த, பா.ம.க., நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அவர் நிருபர்

களிடம் கூறியதாவது:

அயோத்தியில் நடக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு வந்துள்ளது. மக்கள் கூட்டம் அதிகமிருக்கும் என்பதாலும், இதர வேலைகளாலும் கலந்து கொள்ள முடியவில்லை. பிறகு ஒரு நாளில் அங்கு செல்ல உள்ளேன். திராவிட மாடல் ஆட்சி என சொல்பவர்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். ஏன் கணக்கெடுப்பு நடத்த தயங்குகிறார்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பு, தமிழகத்தில் நடத்த வலியுறுத்தி வருகிறோம். ஆனால், ஒரு சில கட்சி தலைவர்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாமென சொல்கிறார்கள். அவர்களுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த புரிதல் இல்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.

சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

தைப்பூச திருவிழா கொடியேற்றம்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை, சிவசுப்பிர

மணிய சுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, சுவாமி நிலத்தில் புற்றுமண் எடுத்தலும், கணபதி பூஜை, யாகசாலை பூஜைகளுடன் கொடியேற்றபட்டது.

இன்று, புலி வாகன உற்சவம், நாளை செவ்வாய்க்கிழமை பூத வாகன உற்சவம், நாளை மறுநாள் நாக வாகன உற்சவம் நடக்கிறது. ஜன., 25- அன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு காலை, 9:00 மணிக்கு சாலை விநாயகர் கோவிலில் இருந்து, பால் குட ஊர்வலம், கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடக்கவுள்ளது. அன்றிரவு, 10:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம், 12:00 மணிக்கு பொன்மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, ஜன., 26- மாலை, 6:00 மணிக்கு விநாயகர் தேரோட்டம் தொடர்ந்து, யானை வாகன உற்சவம் நடக்கிறது.

ஜன., 27- சனிக்கிழமையன்று, சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேரோட்டம் நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு, பெண்கள் மட்டும் வடம் பிடிக்கும், தேரோட்டம் நடக்கிறது. ஜன., 28-ல் வேடர்பறி குதிரை வாகன உற்சவமும், 29ல் விழா கொடியிறக்கம் மற்றும் பூப்பல்லக்கு உற்சவமும், 30-ல் சயன உற்சவமும் நடக்கிறது. விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை, கோவில் அறங்காவலர்கள், மற்றும் விழா குழுவினர் செய்து

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us