sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'ஸ்டாலினை போல் பொய் சொல்பவர்கள் யாருமில்லை'

/

'ஸ்டாலினை போல் பொய் சொல்பவர்கள் யாருமில்லை'

'ஸ்டாலினை போல் பொய் சொல்பவர்கள் யாருமில்லை'

'ஸ்டாலினை போல் பொய் சொல்பவர்கள் யாருமில்லை'


ADDED : ஜன 26, 2025 03:59 AM

Google News

ADDED : ஜன 26, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ''ஸ்டாலினை போல் பொய் சொல்பவர்கள் யாருமில்லை,'' என, முனுசாமி எம்.எல்.ஏ., பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், அத்திமுகம் கிராமத்தில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்விழா பொதுக்கூட்டம், ஒன்றிய செயலாளர் பாபு வெங்கடாசலம் தலை-மையில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்தில், கட்-சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., இளை-ஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொதுமக்க-ளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், ''இந்திய துணை கண்டத்தில், ஸ்டாலினை போல் பொய் சொல்பவர்கள் யாரும் இல்லை. நாங்கள் ஸ்டாலினை போல ஏமாற்ற மாட்டோம். அ.தி.மு.க., வாக்களித்த மக்களை ஏமாற்றியதாக வர-லாறே இல்லை. ''ஓசூர் பகுதியில் விளையும் பூக்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என, முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,சிடம் கூறிய போது, 21 கோடி ரூபாயில், ஓசூரில் சர்-வதேச மலர் ஏல மையத்தை அறிவித்தார். அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், 300 கோடி ரூபாயில், கொடியாளம் அணையிலி-ருந்து ஏரிகளுக்கு நீர் நிரப்பப்படும்,'' என்றார்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, தலைமை கழக பேச்சாளர்கள் தாடி ராசு, சுறுசுறுப்பு சுப்பைய்யா உட்பட பலர் பங்கேற்றனர். சூளகிரி ஒன்றிய பொருளாளர் நாராய-ணப்பா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us