தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பஞ்.,ல் அடிப்படை வசதிகள் இல்லை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு

பஞ்.,ல் அடிப்படை வசதிகள் இல்லை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு

பஞ்.,ல் அடிப்படை வசதிகள் இல்லை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு


ADDED : அக் 06, 2026 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2026 06:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தினேஷ்-குமார் தலைமையில் நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான, 876 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். தொடர்ந்து, போச்சம்-பள்ளி வலச

கவுண்டனுார் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார், கலைவாணி ஆகியோரின் மகன் அவினேஷ்-, 7, என்பவருக்கு, இதய அறுவை சிகிச்சை மேற்-கொள்ள, முதல்வர் காப்பீட்டு அட்டை பெறும் வகையில், நேற்று ரேஷன் அட்டையை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார்.

ஆலப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட ஆலப்பட்டி கால-னியில் வசிக்கும் மக்கள் அளித்த மனுவில் கூறி-யிருப்பதாவது:எங்களது பஞ்.,ல், நடந்த கிராமசபை கூட்டங்-களில் பொதுமக்களின் கோரிக்கைகளை, நிறை-வேற்றப்பட்ட தீர்மானங்கள் இதுவரை செயல்ப-டுத்த படவில்லை. குறிப்பாக, பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிவுநீர் வடிகால், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரவில்லை. மேலும், கடந்த ஆண்-டுக்கான ஊராட்சி வரவு -செலவு கணக்குகள், திட்ட நிதி செலவினங்களில் குளறு

படிகள் உள்ளது. பாதாள சாக்கடை திட்ட நிதி குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டி.ஆர்.ஓ., மஞ்சுளா, ஆட்சியரின் நேர்முக உத-வியாளர் (பொது) முருகேசன், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலு-வலர் கீதா ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்-டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us