/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை
/
வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ADDED : அக் 08, 2024 05:04 AM
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னெச்ச-ரிக்கை நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்களுக்கு மாதிரி செயல்-முறை விளக்கமளிக்கப்பட்டது.
அப்போது, தீப்பிடிக்கும் நேரங்-களில் தீயை லாவகமாக அணைப்பது, தீயில் மாடியில் சிக்கியவர்-களை மீட்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மழையின் போது மரக்கிளைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை, மரங்களை வெட்டும் இயந்திரம் மூலம் அவர்களை மீட்பது. வீடு-களில் தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில், படகுகள் மூலம் மக்-களை மீட்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்-கான பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்-தது. இதை மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா உள்பட பலர் பார்வையிட்டனர்.