ADDED : ஆக 08, 2026 05:47 AM

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளி அரசு மருத்-துவக் கல்லுாரி மருத்துவமனையில், அரசு நர்சு கள் சங்கம் மற்றும் செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
செவிலியர்கள் தனலட்சுமி, ஸ்ரீதேவி தலைமை வகித்தனர். பாலமுருகன், பிரபு முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மறு பணி அமர்த்தும் ஆட்குறைப்பு தொடர்பான அரசாணை எண். 204ஐ உடனே ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதிய முறையை முற்றிலும் ரத்து செய்து, தொகுப்பூதி-யத்தில் பணிபுரியும் அனைத்து செவிலியர் க-ளையும் உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை-களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.இதே போல், கிருஷ்ணகிரி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில், தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பட்டதாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செவிலியர் கண்-காணிப்பாளர் நிலை - 2, சரளாதேவி, லதா ஆகியோர் தலைமை வகித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
