ADDED : நவ 24, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நர்சிங் கல்லுாரி
மாணவி மாயம்
கிருஷ்ணகிரி, நவ. 24-
போச்சம்பள்ளி அடுத்த, கெங்கிநாய்க்கம்பட்டியை சேர்ந்தவர் மதுமிதா, 19. முதலாமாண்டு நர்சிங் கல்லுாரி மாணவி. கடந்த, 18ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை; எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து, மாணவியின் பெற்றோர் போச்சம்பள்ளி போலீசில் நேற்று முன்தினம் புகாரளித்தனர். அதில், வேலூர் மாவட்டம் திருமலையை சேர்ந்த ஜெகதீஷ், 20, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.