/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
செயின்ட் பீட்டர்ஸ் பார்மசி கல்லுாரியில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு

ADDED : செப் 28, 2024 04:22 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் பார்மசி கல்லுாரியில், தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. செயின்ட் பீட்டர்ஸ் கல்வி குழும செயலாளர் லாஸியா தம்பிதுரை
குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
செயின்ட் பீட்டர்ஸ் பார்மசி கல்லுாரி முதல்வர் பிரேம் ஆனந்தா வரவேற்றார். கருத்தரங்கில், பார்மசி துறையின் முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் பற்றியும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மருத்துவத்துறையில் செயல்படுத்தப்படும் மருந்துகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. புதுச்சேரி மதர் தெரேசா பார்மசி கல்லுாரி பேராசிரியர் கவிமணி, கோவை ராமகிருஷ்ண பார்மசி கல்லுாரி பேராசிரியர் காந்திமதி, சங்ககிரி விவேகானந்தா மகளிர் பார்மசி கல்லுாரி பேராசிரியர் ஆனந்தகுமார் ஆகியோர் பேசினர்.
செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லுாரி மருத்துவ இயக்குனர் ராஜா முத்தையா. முதல்வர் சோமசேகர், துணை முதல்வர் ஆனந்தரெட்டி, மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவா, இருப்பிட மருத்துவ அலுவலர் பார்வதி, நர்சிங் கல்லுாரி முதல்வர் சுமதி சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.