ADDED : டிச 14, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிய பஞ்., அலுவலகம் திறப்பு
போச்சம்பள்ளி, டிச. 14-
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவம்பட்டி பஞ்.,ல், ஒன்றிய பொதுக்குழு நிதி, ஒன்றிய கவுன்சிலர் நிதி மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியின் கீழ், 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பஞ்., அலுவலகத்தை நேற்று ஊத்தங்கரை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம் திறந்து வைத்தார். மத்துார் ஒன்றிய தி.மு.க., சேர்மன் விஜயலட்சுமி பெருமாள், சிவம்பட்டி பஞ்., தலைவர் பழனியம்மாள் மனோகரன், மாவட்ட கவுன்சிலர் சங்கர் மற்றும் மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.தி.மு.க., - தி.மு.க., பஞ்., தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

